#Breaking:மத்திய தொழில்துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா மரணம்..!

Default Image

மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை செயலாளர் குருபிரசாத் மொஹாபத்ரா கொரோனா தொற்று காரணமாக இன்று உயிரிழந்தார்.

மத்திய தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை (டிபிஐஐடி) செயலாளர் டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா,கடந்த  ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று  ஏற்பட்டதன் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்,இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமானதால் டாக்டர் குருபிரசாத் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும், சிகிச்சை பலனின்றி குருபிரசாத் உயிரிழந்தார்.

இதனையடுத்து,டாக்டர் குருபிரசாத் மொஹாபத்ரா அவர்களின் மறைவிற்கு மத்திய ரயில்வே மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்ட பிற மத்திய அமைச்சர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலத்தில் இருந்து 1986 ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்வான குருபிரசாத் அவர்கள் பல்வேறு துறைகளில் தனது முத்திரையை பதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்