விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ்!
விதிகளில் திருத்தம் கொண்டு வந்த மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ்.
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தலால் ஸ்தம்பித்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியானது.
இந்நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் அவர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, தேசிய தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் மத்திய அரசின் நிதியுதவி பெறும் தொழில்நுட்ப நிறுவனங்களில் பயில 12-ம் வகுப்பு பொது தேர்வில் 75% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற வீதியில் திருத்தம் கொண்டு வந்துள்ளார்.
மேலும் JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழை மட்டும் அளித்தால் போதும் என தெரிவித்துள்ளார்.