மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமல்ல.! மத்திய சுகாதாரத்துறை தகவல்.!
மாரடைப்பு ஏற்பட கொரோனா தடுப்பூசி காரணமல்ல என மத்திய சுகாதாரத்துறை மக்களவையில் விளக்கம் அளித்துள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் நாட்டில் மாரடைப்பு விகிதம் அதிகரித்துள்ளது எனவும், இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமா என நாடாளுமன்ற மக்களவையில் ஜனதா தளம் கட்சியை சேர்ந்த எம்பி ராஜுவ் ரஞ்சன் சிங் கேள்வி எழுப்பி இருந்தார்.
மாரடைப்பு :
இதற்கு மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வ பதில் அளித்துள்ளார். அதில், கொரோனாவுக்கு பின்னர் மாரடைப்பு அதிகமாகியுள்ளது என எந்தவித அறிவியல்பூர்வ அறிவிப்பும் இல்லை. என குறிப்பிட்டுள்ளார்.
சுகாதாரத்துறை விளக்கம் :
மேலும், மாரடைப்பு ஏற்படுவதற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல எனவும் மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன் பவார் எழுத்துபூர்வ பதிலில் குறிப்பிட்டுள்ளார்.