மீண்டும், மீண்டுமா? உ.பி-க்கு ரூ.31 ஆயிரம் கோடி! தமிழ்நாட்டுக்கு ரூ.7 ஆயிரம் கோடி மட்டுமே!
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு கடந்த மாத வரி பகிர்வை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உ.பிக்கு ரூ.31,039 கோடியும், பீகாருக்கு ரூ.17,403.36 கோடியும், தமிழகத்திற்கு ரூ.7057 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம் வரிப்பகிர்வு தொகையை தற்போது மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
மொத்தம், ரூ.1,73,030 கோடி ரூபாயனது 2025 ஜனவரி மாதத்திற்கு மாநில வாரியாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 2024இல் இந்த வரிப்பகிர்வு ரூ.89,086 கோடியாக மட்டுமே இருந்தது. இந்த முறை மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த திட்டங்களுக்கு செலவிட இந்த முறை அதிக தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வழக்கம் போல அதிக மக்கள் தொகை கொண்ட உத்திர பிரதேசத்திற்கு ரூ.31,039 கோடி வரிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து பீகார் மாநிலத்திற்கு ரூ.17,403.36 கோடி வரிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு ரூ.13,017.06 கோடி வரிப்பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவுக்கு ரூ.10.930.31 கோடியும், ராஜஸ்தானுக்கு ரூ.10,426.78 கோடியும் வரி பகிர்வு அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டிற்கு ரூ.7,057.89 கோடி ஒதுக்கப்பட்டது. மிக குறைவாக கோவா மாநிலத்திற்கு ரூ.667.91 கோடியும், சிக்கிம் மாநிலத்திற்கு ரூ.671.35 கோடியும் வரி பகிர்வு கிடைத்துள்ளது.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரிப்பகிர்வு தொகையில், மக்கள்தொகை செயல்திறனுக்கு 12.5 சதவீதமும், மாநில வருமானத்திற்கு 45 சதவீதமும், மக்கள் தொகைக்கு 15 சதவீதமும், நிலம் பயன்பாட்டிற்கு 15 சதவீதமும், காடு வளத்திற்கு 10 சதவீதமும், வரி மற்றும் நிதி உள்ளிட்ட தேவைகளுக்கு 2.5 சதவீதமும் வரிப்பகிர்வு பகிர்ந்து அளிக்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டது.