#Breaking : பி.எஸ்.என்.எல்-ஐ வலுப்படுத்த 1.64 லட்சம் கோடி.! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.!
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த 1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளது.
அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மற்ற நெட்ஒர்க் உடன் போட்டி போடும் அளவுக்கு இல்லாமல் பலன் இழந்து காணப்படுகிறது. 4ஜி சேவை வலுப்பெற வேண்டும் என பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
அரசு தொலைதொடர்பு நிறுவனம் வலுப்பெற போதிய நிதி கிடைக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது, பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை வலுப்படுத்த 1.64 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள்ளதாம். இதன் மூலம் அதன் தரம் உயர்த்தப்படும் 4ஜி சேவை இன்னும் வலுப்பெறும் என கூறப்படுகிறது.