நிதிப்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் உதான் திட்டம் தள்ளிவைப்பு..!

Default Image

மாநில அரசுகளின் நிதிப்பற்றாக்குறை காரணமாக மத்திய அரசின் உதான் திட்டத்தை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் பெரும்பான்மை நகரங்களை விமானப் போக்குவரத்தின் மூலம் இணைக்கும் நோக்குடன் 2017ம் ஆண்டு உதான் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டது.

முதல் கட்டமாக 2017 இறுதிக்குள் 31 புதிய இடங்களில் விமான சேவையை தொடங்க மத்திய அரசு திட்டமிட்ட போதிலும், தற்போது வரை சேலம் உட்பட16 இடங்களில் மட்டுமே விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

விமான நிலையங்களுக்கான அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்த போதுமான நிதி இல்லை என சில மாநில அரசுகள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனவே தீயணைப்பு உபகரணங்கள், விமான நிலைய பாதுகாப்பு சோதனை உபகரணங்கள்  முதலியவற்றை வாங்கி மாநில அரசுகளுக்கு குத்தகை முறையில் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் இறுதிக்குள் 31 விமான நிலையங்களையும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்