“பப்ஜி விளையாட்டை மத்திய அரசு தடை செய்யாது”- காங்கிரஸ் மூத்த தலைவர் கிண்டல்!
பப்ஜியை தடை செய்தால் இளைஞர்கள் பிரதமர் மோடியிடம் வேலை கேட்பார்கள் எனவும், அதனால் பப்ஜி தடை செய்ய வாய்ப்பில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் கிண்டல் செய்துள்ளார்.
உலகளவில் உள்ள பல இளைஞர்கள் அதிக அளவில் விளையாடும் கேம், பப்ஜி. தென் கொரிய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த விளையாட்டு, சீன நிறுவனமான டென்செண்ட், இதற்க்கு பெரியளவில் முதலீடுகளை செய்துள்ளது. இந்த விளையாட்டை இந்தியாவில் மட்டும் 17 கோடியே 50 லட்சதிற்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து விளையாண்டு வருகின்றனர்.
இந்தவகையில், இந்தியாவில் இந்திய அரசாங்கம் விடுத்த விதிமுறைகளை மீறுவதாக பப்ஜி, அலி எக்ஸ்பிரஸ், யு லைக், ஜியோமி நிறுவனத்தின் ஸில்லி போன்ற 275 செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்த பட்டியலை மத்திய அரசு தயாரித்துள்ளது.
இந்நிலையில், பப்ஜி விளையாட்டு தடை செய்வது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மன்னு சிங்வி, தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர், பப்ஜி விளையாட்டை தடை செய்ய மோடி விரும்புவது உண்மைதான் எனவும், இளைஞர்களுக்கு கற்பனை உலகின் கவனச்சிதறல்கள் இல்லையென்றால், அவர்கள் உண்மையான உலகத்திற்கான விஷயங்களான வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றை இளைஞர்கள் கேட்பார்கள்.
அது ஒரு பிரச்சினையாக இருக்கும் என்பதை மோடி உணர்ந்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அபிஷேக் மன்னு சிங்வி, அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
Modiji really wanted to ban PubG but realized that if the youth do not have the distractions of the fantasy world, they will ask for real world things like Jobs and that will be an issue.#pubgban
— Abhishek Singhvi (@DrAMSinghvi) July 28, 2020
மேலும், இந்தியாவில் 59 சீன செயலிகள் தடை செய்ததை தொடர்ந்து, அந்த செயலிகளின் தொடர்புடைய 47 குளோன் செயலிகளை தடை விதிப்பதாக மத்திய அரசு நேற்று தெரிவித்துள்ளது. அந்தவகையில், டிக்டாக் லைட், ஹெலோ லைட், ஷேர் லைட், பிகோ லைவ் லைட் ஆகியவை அடங்குவது குறிப்பிடத்தக்கது.