வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல்.. மத்திய அரசு எச்சரிக்கை.!

Default Image

புது டெல்லி : பறவைக் காய்ச்சல் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு எச்சரிக்த்துள்ளது.

பறவைக் காய்ச்சல் (H5N1வைரஸ்) தொற்று வேகமாகப் பரவும் நோயாகும். இது மக்களுக்குப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால், இந்த நோய்த்தொற்றின் பரவலைக் குறைக்கவும், தடுக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு மாநில அரசுக்கு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

ஏவியன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பொதுவாக புலம்பெயர்ந்த பறவைகளிடையே பரவுவதாக சொல்லப்படுகிறது. இது வளர்ப்பு கோழி பறவைகள் மத்தியில் வெடிப்பை ஏற்படுத்தும். இது புலம்பெயர்ந்த பறவைகள் கோழிகளுடன் தொடர்பு கொண்டால் இவ்வாறு ஏற்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எளிதாக மனிதர்களிடம் பரவக்கூடியதாம்.

இந்தியாவின் சில மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் தொற்று பரவி வருவதால், விழிப்புடன் இருக்க எச்சரிக்கையை வழங்கியுள்ளது. தொற்று பரவலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து மக்களுக்குத் தெரிவிக்கவும் அந்தந்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “ஏதேனும் இடங்களில் பறவைகள் மற்றும் கோழிகள் வழக்கத்திற்கு மாறாக உயிரிழந்தால் அதனை கவனத்தில் கொள்ளவும், அது குறித்து உடனடியாக கால்நடை பராமரிப்புத் துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

பறவைக் காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து சுகாதாரப் பணியாளர்கள், தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்குமாறும் கூறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து கோழி பண்ணைகளையும் ஆய்வு செய்யுவும், சுகாதாரம் மற்றும் பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் கொடுக்கப்பட்ட அனைத்து விதிகளும் அங்கு பின்பற்றப்படுகிறதா என்பதைச் சரிபார்க்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

4 மாநிலங்களில் பரவல்

ஆந்திரா (நெல்லூர் மாவட்டம்), மகாராஷ்டிரா (நாக்பூர் மாவட்டம்), ஜார்கண்ட் (ராஞ்சி மாவட்டம்) மற்றும் கேரளா (ஆலப்புழா, கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்டங்கள்) ஆகிய 4 மாநிலங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

மனிதர்களிடையே பறவைக் காய்ச்சல் தென்பட்டால் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும். லேசானது முதல் கடுமையான காய்ச்சல் ஏற்படும், இருமல், தொண்டை வலி, தசை வலி மற்றும் சுவாசக் கோளாறு ஆகியவை அடங்கும். சில நேரங்களில், கடுமையான சுவாசக் கோளாறு நோய்க்குறி (ARDS) மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்