மத்திய அரசு அவசர நடவடிக்கை: அண்டை நாடுகளுடன் எல்லைகளை மூட உத்தரவு.!

சீனாவில் தொடங்கி உலக முழுவதும் 127 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவை ஆட்டிப்படைக்கிறது. இந்தியாவில் பதிகபரவர்களின் எண்ணிக்கை இதுவரை 107ஆக உயர்ந்துள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதனால் கொரோனா வைரஸை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்தது. இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பள்ளி, திரையரங்குங்கள் மூடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் எல்லை இன்று நள்ளிரவு முதல் மூடப்படும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வங்கதேசம், பூடான், நேபாளம், மியான்மர் ஆகிய நாடுகளுக்கு செல்லும் சாலை வழிகள், நேற்று மூடப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் எல்லை பகுதியில் அமைந்துள்ள அசாம், பீஹார், மேகாலயா, மிசோரம், திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகான்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு இது தொடர்பான உத்தரவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025