#BREAKING: நாளை சுகாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அரசு ஆலோசனை..!
நாளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சருடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக பல மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு சூழல் தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து தற்போது பிரதமர் மோடி மத்திய அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.