16 யுடியூப் சேனல்களை முடக்கிய மத்திய அரசு..!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
இன்று அதிகமானோர் யூடியூப்பில் தான், தங்களது நேரத்தை செலவிடுகின்றனர். அந்த வகையில், யுடியூப் சேனல்களில் பல நல்ல விஷயங்களும், தீய விஷயங்களும் இடம்பெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் மத நல்லிணக்கம் குறித்து தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நாட்டின் பாதுகாப்பு வெளியுறவு மற்றும் மதநல்லிணக்கம் குறித்த தவறான தகவல்களை பரப்பிய 16 யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், பாகிஸ்தானை சேர்ந்த ஆறு செய்தி சேனல்களும் இதில் அடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் 22 யுடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி இருந்த நிலையில், தற்போது 16 சேனல்கள் முடக்கப்பட்டுள்ளது.