#Breaking:கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பம்;தலா ரூ.50000 வழங்க பரிந்துரை..!
கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் பரிந்துரைத்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மாநில அரசுகள் ,மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிவாரண நிதி தொடர்பான வழக்கில்,கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவரின் இறப்பு சான்றிதழை வைத்திருக்கும் அவரது குடும்பத்திற்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுநோயால் இறந்தவர்களுக்கு இழப்பீட்டு விதிகளை சமர்ப்பிக்க உச்சநீதிமன்றம் 10 நாட்களுக்கு முன்பு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.மேலும்,இறப்புச் சான்றிதழுக்கான விதிகளை வழங்கவும் நீதிமன்றம் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
After the order of the Supreme Court, National Disaster Management Authority (NDMA) issues guidelines on ex-gratia for COVID-19 deaths and recommended that Rs 50,000 to be paid to the kin of those who died of COVID-19 out of state disaster relief funds pic.twitter.com/spcIbVjPVp
— ANI (@ANI) September 22, 2021