#BREAKING: நெல்லுக்கு ரூ.72, கம்பிற்கு ரூ.100 ஆதார விலையை உயர்த்திய மத்திய அரசு..!

- ஒரு குவின்டால் நெல்லுக்கு ரூ.72, கம்பிற்கு ஒரு குவின்டாலுக்கு ரூ.100 ஆதார விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
- ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து மத்திய விவசாயத்துறை நரேந்திர சிங் தோமர் செய்தியாளர்களை சந்திக்கும்போது தெரிவித்தார்.
அதில், ஒரு குவின்டால் நெல்லுக்கு ஆதார விலை ரூ. 72 உயர்த்தி ரூ.1868-ல் இருந்து ரூ.1940 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும், கம்பிற்கு அடிப்படை ஆதார விலை குவின்டாலுக்கு ரூ.100 அதிகரிக்கப்பட்டு ரூ.2,250ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தோமர் தெரிவித்தார். மேலும், ரயில்வே துறையில் 5ஜி இணையதள சேவையை வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
இதனால், ரூபாய் 25 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்தை அடுத்த 5 ஆண்டுக்குள் முடிக்க இலக்கு என மத்திய அரசு தெரிவித்துள்ளது.