தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை.!

Default Image

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையை தவிர பிற அமைச்சகங்கள் தனித்தனியாக டைரிகள், காலண்டர்கள் அச்சிடுவதற்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இதனிடையே அமைச்சகங்களுக்கும் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கவுபா கூறுகையில், பல்வேறு அமைச்சகங்கள் சுவர் காலண்டர்கள், மேஜை காலண்டர்கள் மற்றும் டைரிகளை என தனித்தனியாக அச்சிட்டு வருகின்றன. இதன் மூலம் இரட்டை பணிகளும், அதிக நிதி செலவும் ஏற்படுகிறது என்று குறிப்பிட்டார். எனவே இந்த பணிகள் அனைத்தும் தகவல் தொடர்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக கூறியுள்ள ராஜீவ் கவுபா, அந்த பணியகம் அரசு காலண்டர்கள், டைரிகளை மொத்தமாக தயாரித்து பிற அமைச்சகங்கள் மற்றும் துறைகளுக்கு வழங்கும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்