காஷ்மீரில் இருந்து 10,000 வீரர்களை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவு .!
கடந்த ஆண்டு ஆகஸ்டு 5-ம் தேதி காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் எந்த வித அசம்பாவிதமும் நடக்காமல் இருக்க காஷ்மீர் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டது.
இதனால், பல பகுதிகளில் இருந்து காஷ்மீருக்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இந் நிலையில், காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த மத்திய ரிசர்வ் படையினர், எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மத்திய தொழிற்படையினர் உள்பட சுமார் 10,000 வீரர்களை திரும்ப அழைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிடப்பட்டது.