மத்திய அரசு ஆர்வம்..! தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்த அமுல்படுத்த..!
மத்திய அரசு, தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைச் சட்டத்தை, அதன் வீரியத் தன்மை குறையாமல் நடைமுறைப்படுத்துவதற்கான மாற்றுவழிகள் குறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகார்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பின்னர் கைது நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யுமாறு, மத்திய அரசுக்கு அண்மையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு எதிராக வடமாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்தது.
இதன் எதிரொலியாக உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மறு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இது குறித்து தீவிரமாக ஆலோசித்து வரும் மத்திய அரசு தேவைப்பட்டால் அவசரச் சட்டம் கொண்டு வந்தேனும், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை அதன் பழைய வடிவத்திலேயே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.