மல்யுத்த வீரர்களின் பிரச்சினையை மத்திய அரசு கவனத்துடன் கையாண்டு வருகிறது – அமைச்சர் அனுராக் தாக்கூர்

போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களின் பிரச்சினையை அரசு உணர்வுப்பூர்வமாக கையாள்கிறது அமைச்சர் அனுராக் தாக்கூர் பேட்டி.
ஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்களான சாக்ஷி மாலிக், வினேஷ் போகட், பஜ்ரங் புனியா மற்றும் சங்கீதா போகட் உள்ளிட்ட பலர், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கைக் கைது செய்யக் கோரி புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டம் குறித்து மும்பைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மல்யுத்த வீரர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசாங்கம் ஏற்று விசாரணை நடைபெற்று வருகிறது.
போராட்டம் நடத்தும் மல்யுத்த வீரர்களின் பிரச்சினையை அரசு உணர்வுப்பூர்வமாக கையாள்கிறது. மல்யுத்த வீரர்களை காயப்படுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். மேலும் அவர்களின் குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை முடிந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மல்யுத்த வீரர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.