#Corona:மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – 5 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியாவில் 5 மாநிலங்களில் கொரோனா பரவலை தீவிரமாக கண்காணிக்க மத்திய அரசு அறிவுறுத்தல்.
கடந்த சில மாதங்களில் இந்தியாவில் கொரோனா தொற்று வழக்குகளின் எண்ணிக்கையில் நீடித்த நிலையில்,தற்போது குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.அதன்படி,கடந்த சில நாட்களாக நாட்டில் தினசரி 1000-க்கும் குறைவான புதிய கொரோனா வழக்குகள் பதிவாகியிருந்தன. ஆனால்,இன்றைய தினத்தில் மீண்டும் கொரோனா மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டுள்ளது.அந்த வகையில் கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கொரோனா பரவல் சற்று அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில்,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு,கொரோனா தொற்று பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும்,கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக,மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன், கேரளா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி மற்றும் மிசோரம் ஆகிய மாநில அரசுகளுக்கு கடிதமும் எழுதியுள்ளார்.அக்கடிதத்தில்,கொரோனா பரவல் சிறிய அளவில் அதிகரித்து வருவதாகவும்,மேலும் கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பாக,தடுப்பூசி பணிகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் எனவும் மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் கேட்டுக்கொண்டுள்ளார்.
.