#Breaking: தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் 335 கோடி ரூபாயை ஒதுக்கியது மத்திய அரசு!
15 வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் இருந்து 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது.
இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நிலையில், பல மாநிலங்களில் கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதை சமாளிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சகம், 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரைபடி, 6 வது மாத தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.6,195 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதில் தமிழகத்திற்கு 335.41 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று 15 வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியில் 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது. இதில் அதிகபட்சமாக கேரளாவுக்கு ரூ.1,276.91 கோடியும், இமாச்சல பிரதேஷ் மாநிலத்திற்கு ரூ.952.58 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15 வது நிதி குழு பரிந்துரை அடிப்படையில் தமிழகத்திற்கு 335 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியது!#centralgovernment | @FinMinIndia | @CMOTamilNadu pic.twitter.com/4B6dygabXy
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) November 10, 2020