புதிய கல்விக் கொள்கை வரைவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ?

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் புதிய கல்வி வரைவு கொள்கையை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம்  வெளியிட்டது. பதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில்  கடும் எதிர்ப்பு கிளம்பியது.பின்  3 வது மொழியாக இந்தி பயில வேண்டும் என்பது கட்டாயமில்லை என்று மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் திருத்தப்பட்ட வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனாலும் புதிய கல்வி வரைவு கொள்கையை நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று பிரதமர்  மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில்  புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து இன்று மாலை 4 மணிக்கு மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரமேஷ்  போக்ரியால் செய்தியாளர்களை சந்தித்து விளக்க அளிக்க உள்ளனர்.