மேகேதாட்டு அணை விவகாரத்துக்கு தீர்வு காண தமிழக, கர்நாடக முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி செய்து வருகிறது. இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கு கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அண்மையில் அனுமதி அளித்தது. மேகதாட்டு விவகாரத்தில் கர்நாடகா மற்றும் மத்திய அரசை கண்டித்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மத்திய நீர்வளம் ,போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சந்தித்து மேகதாட்டு அணை விவகாரம் குறித்து விவாதித்தார். இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு விரைவில் அழைப்பு விடுக்க அதிகாரிகளுக்கு நிதின் கட்கரி உத்தரவிட்டுள்ளதாக குமாரசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்தார். இதனால் இரு மாநில முதலமைச்சர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 26] எபிசோடில் புது வீட்டிற்கு குடி வரும் ரோகிணியின் அம்மா, ரோகிணி போட்ட…
சென்னை : வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலையாக உருவெடுக்கும் என முன்னதாக தெரிவித்திருந்தனர். மேலும்,…
சென்னை : தெற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மையம் உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மையம்…
மும்பை : கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் உலகையே அதிரவைத்தது. இந்த தாக்குதலை…