50 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க மத்திய அரசு முடிவு!
50 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகள் வாங்க மத்திய அரசு முடிவு.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை தடுப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் இறங்கியுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மூன்று மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் இருப்பதாக, சுதந்திர தினவிழாவில் போது பிரதமர் மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், புனேயில் உள்ள செரம் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பரிசோதனையில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், பாரத் பயோடெக், சைடஸ் காடிலா ஆகிய இரண்டு நிறுவனங்களும் முதல்கட்ட சோதனையை முடித்து இரண்டாம் கட்ட சோதனைக்கு முன்னேறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு மத்திய அரசு 50 லட்சம் கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.