கொரோனா தடுப்பூசி முன்பதிவு கோவின் இணையதளத்தில் 2 நாள்களில் தமிழ் மொழி சேர்ப்பு.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை பேரழிவை ஏற்படுத்தி மக்களை வாட்டி வதைத்து வருகிறது, மேலும் கொரோனா தொற்றிலிரந்து மக்களைக் காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே ஒரே தீர்வாக உள்ளதால், மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களை தடுப்பூசி போட வலியுறுத்திவருகிறது.
இதனால் தடுப்பூசி மையங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக கொரோனா தடுப்பூசியை பெற கோவின் என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்யுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது, ஆனால் அதன் இணைய பக்கத்தில் 9 மொழிகள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்தன, இதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டிருந்தது.
இதற்கு தமிழகத்தில் அரசியல் தலைவர்களால் பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது, இதன்விளைவாக தடுப்பூசி முன்பதிவுக்கான கோவின் இணையதளத்தில் தமிழ் மொழியை சேர்க்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து மத்திய அரசிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் வலியுறுத்தியிருந்தார், இதையடுத்து மத்திய அரசு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளது.
அதில் கோவின் இணையதள வசதி படிப்படியாக பல்வேறு மாநில மொழிகளில் செல்படுத்தப்பட்டு வருகிறது என்றும், இன்னும் 2 நாள்களில் தமிழ் மொழி கோவின் இணையதளத்தில் சேர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், இன்று (நவம்பர்5)…
திருச்சி : வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் நினைவுகளை முன்னிட்டு சென்னையில் ஓர் புத்தக வெளியீட்டு…
மும்பை : இந்திய அணி, வரும் நவ-22ம் தேதி முதல் ஆஸ்திரேலிய அணியுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள்…