லஷ்மி விலாஸ் வங்கியை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல்.!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள லஷ்மி விலாஸ் வங்கியினை, டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
தனியார் வங்கியான லஷ்மி விலாஸ் வங்கி கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது. லஷ்மி விலாஸ் வங்கியை ரிசர்வ் வங்கி (எல்விபி) தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த நிலையில்,சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, வங்கி இணைப்பதற்கான ஒரு பகுதியாக, லட்சுமி விலாஸ் வங்கியில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. அதன்படி, 17.11.2020 முதல் 16.12.2020 வரை அதன் வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்கவோ, பரிமாற்றம் மேற்கொள்ளவோ முடியாது என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் லட்சுமி விலாஸ் வங்கியை டிபிஎஸ் வங்கியுடன் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து சிங்கப்பூரின் மிகப்பெரிய வங்கியான டிபிஎஸ் குரூப் ஹோல்டிங்ஸ், லட்சுமி விலாஸ் வங்கியை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், டிபிஎஸ் 563 கிளைகள், 974 ஏடிஎம்கள் மற்றும் சில்லறை கடன்களில் 1.6 பில்லியன் டாலர் உரிமையைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து, ஒருங்கிணைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, டிபிஎஸ் இந்தியா புதிய மூலதனமான, ரூ.2,500 கோடியை எல்விபியில் செலுத்துகிறது. புதிய விதிப்படி, ஒரு வைப்புதாரர் வைத்திருக்கும் அனைத்து வகையான கணக்குகளுக்கும் திரும்பப் பெறும் வரம்பு ரூ.25,000-ஐ தாண்டக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு உள்நாட்டு வங்கியை மீட்டெடுப்பதற்காக ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருப்பது இதுவே முதம்முறையாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,
February 8, 2025![IND vs ENG 2nd ODI cricket match](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-vs-ENG-2nd-ODI-cricket-match.webp)
நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!
February 8, 2025![rohit sharma Kevin Pietersen](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/rohit-sharma-Kevin-Pietersen.webp)
“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!
February 8, 2025![](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/IND-rohit-sharma-.webp)
டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!
February 8, 2025![narendra modi HAPPY](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/narendra-modi-HAPPY-.webp)