வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு… மத்திய அரசு ஒப்புதல்!
Salary Hike : வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி, உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு, வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.100 குறைப்பு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
Read More – சமையல் எரிவாயு மானிய திட்டம் நீட்டிப்பு..! அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அறிவிப்பு
இந்த நிலையில், தற்போது வங்கி ஊழியர்களுக்கு 17 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது மேலும் சர்ப்ரைஸாக பார்க்கப்படுகிறது. அதாவது, வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வங்கி ஊழியர்கள் தொடர்ந்து வைத்து வருகின்றனர்.
Read More – புதுச்சேரி சிறுமி கொலை..! அலட்சியமாக செயல்பட்ட மேலும் 12 காவலர்கள் இடமாற்றம்
இதனை நிறைவேற்றும் விதமாக வங்கி ஊழியர்களுக்கு 17% ஊதிய உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு தொடர்பாக இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்கள் கூட்டமைப்புகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி, 2022 நவம்பர் மாதம் முதல் முன்தேதியிட்டு வங்கி ஊழியர்களுக்கான இந்த 17% ஊதிய உயர்வு அமல்படுத்தப்படுகிறது.
Read More – மகளிர் தினத்தன்று பிரதமர் கொடுத்த அறிவிப்பு… சமையல் சிலிண்டர் விலை அதிரடி குறைவு!
இதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு ஆண்டுக்கு ரூ.8,254 கோடி செலவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊதிய உயர்வு மூலம் நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் வங்கி ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது. மேலும், வாரத்திற்கு 5 நாட்கள் மட்டும் வேலை என்கிற இந்திய வங்கிகள் சங்கம் கோரிக்கையானது பரிசீலனை செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.