டெல்லி:வாழ்க்கைத் துணையின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கணவர் அல்லது மனைவியின் ஓய்வூதியம் பெற கூட்டு வங்கி கணக்கு கட்டாயம் இல்லை என மத்திய பணியாளர் மற்றும் ஓய்வூதியத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.மேலும்,மத்திய அரசின் ஓய்வூதியத்தை பெற,புதிய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும் என்று ஓய்வூதிய பயனர்களை வங்கிகள் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
மத்திய ஓய்வூதியத்துறையின் மூத்த அதிகாரிகளை நேற்று சந்தித்தபின், டாக்டர் ஜித்தேந்திர சிங் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“சமூகத்தில் அனைத்து தரப்பினரும், எளிதாக வாழ்வதற்கு தேவையானதை செய்ய, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு எப்போதும் முயற்சித்து வருகிறது.ஓய்வூதியதாரர்கள் நாட்டின் சொத்துக்கள். அவர்கள் தங்களின் அனுபவம் மூலம் நாட்டுக்கு நீண்ட காலம் சேவையாற்றியுள்ளனர்.
ஓய்வு பெறும் அரசு ஊழியருக்கு, அவரது வாழ்க்கைத் துணையுடன் சேர்த்து கூட்டு வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என தலைமையகம் கருதினால், இந்த விதிமுறையை தளர்த்தி கொள்ளலாம். ஒருவேளை குடும்ப ஓய்வூதியம் பெறும் வாழ்க்கைத் துணை ஏற்கனவே உள்ள கூட்டு வங்கி கணக்கில் ஓய்வூதியம் பெற முடிவு செய்தால், புதிய வங்கி கணக்கு தொடங்க வற்புறுத்த வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…