நாளை பிரதமர் தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!
பிரதமர் மோடி நாளை முக்கிய அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி மற்றும் அமைச்சரவை அமைச்சர்கள் இடையே பல முக்கிய திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அதேசமயம், இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பல முக்கிய முடிவுகளை எடுக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தீபாவளிக்கு முன்னதாக அரசு ஊழியர்களுக்கு மத்திய அரசு ஒரு பெரிய பரிசை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, நாளை நடைபெற உள்ள பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த முறை மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் வரை உயர்த்தலாம். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இது குறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளது.
அகவிலைப்படி (DA) என்பது அரசு ஊழியர்களின் சம்பள கட்டமைப்பின் ஒரு பகுதியாகும். அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் வழங்கபடுகிறது. இந்தக் கூட்டத்தில் அகவிலைப்படி உயர்வு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவெடுக்கலாம் எனத் தெரிகிறது.