மத்திய பட்ஜெட் தாக்கல் – எந்தெந்த பொருட்களுக்கெல்லாம் விலை குறைய வாய்ப்பு..!
சில துறைகளில் உள்ள பொருட்களுக்கு சுங்க வரி 23%-லிருந்து, 13% மாக குறைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று 2023-24 க்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.
மத்திய பட்ஜெட் 7 முக்கிய அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், சில துறைகளில் உள்ள பொருட்களுக்கு சுங்க வரி 23%-லிருந்து, 13% மாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த துறைகளை சார்ந்த பொருட்களுக்கு விலை குறைய வாய்ப்புள்ளது.
அதன்படி, செல்போன், டிவி உள்ளிட்ட மின்சார பொருட்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது. மின்சார வாகன பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. செல்போன் உதிரிபாக பொருட்கள் இறக்குமதிக்கு வரிகுறைக்கப்பட்டுளளது.