2023 பட்ஜெட்டை முன்னிலைப்படுத்த பாஜக 12 நாள் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது.
2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்கிறார். இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்யப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், பாஜக ஆட்சியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இதுவாகும். மேலும், 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த பட்ஜெட்டில், நீர்மூழ்கிக் கப்பல்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், அடுத்தாண்டு தேர்தல் வர இருப்பதால் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், திட்டங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கபடுகிறது.
இந்த நிலையில், 2023 பட்ஜெட்டை முன்னிலைப்படுத்த பாஜக 12 நாள் நாடு தழுவிய பிரச்சாரத்தைத் திட்டமிட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் “மக்கள் சார்பு” நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பாஜக 12 நாள் நாடு தழுவிய பிரச்சாரத்தை தொடங்கும் என்று கட்சித் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நாளில் தொடங்கும் பிரச்சாரத்தை கட்சியின் மாநிலங்களவை எம்பி சுஷில் மோடி ஒருங்கிணைப்பார் என்று இதற்காக ஒன்பது பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…
குஜராத் : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது அயர்லாந்துக்கு எதிராக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
டெல்லி : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருந்த கேம் சேஞ்சர் திரைப்படம் ஜனவரி 10 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஷங்கர்…
சென்னை : நேற்று முன்தினம் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…