இன்று தாக்கலாகிறது 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்..!
மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
நடப்பாண்டு பட்ஜெட் கூட்டத்தொடர்:
நாடாளுமன்ற 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கியது. நடப்பாண்டில் முதல் கூட்டத்தொடர் என்பதால் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கி நடைபெற்றது. இதன்பின், பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார்.
பொருளாதார ஆய்வறிக்கை:
இந்த அறிக்கை 2022-23 முழு நிதி ஆண்டுக்கான இந்திய பொருளாதாரத்தின் நிலையையும், நிதி வளர்ச்சி, பண மேலாண்மை மற்றும் வெளித்துறைகள் உள்ளிட்ட எதிர்கால கண்ணோட்டத்தை மதிப்பாய்வு செய்துள்ளது. பொருளாதார ய்வறிக்கையை தாக்கல் செய்த பின் பேசிய நிதியமைச்சர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு 6.1% ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது என்றார்.
இன்று தாக்கலாகும் முழு பட்ஜெட்:
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ள நிலையில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2023-24 நிதியாண்டில் 6.8% என்றும் பணவீக்கம் 6.8% ஆகவும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 2023-24-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று (பிப்ரவரி 1ஆம் தேதி) நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் 2023-24-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இது அவர் தாக்கல் செய்கிற 5-வது பட்ஜெட் இதுவாகும். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் மத்திய பட்ஜெட் வைக்கப்படுகிறது.
நாடாளுமன்ற தேர்தல்:
அடுத்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிற கடைசி முழுமையான பட்ஜெட்டாக இது அமைகிறது. இதனால் பல்வேறு திட்டங்கள், அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கபடுகிறது. மேலும், இந்த 2023-24-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட்டாகவே அமைய உள்ளது.
பாஜகவின் இறுதி பட்ஜெட்:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஏப்ரல் 6 வரை நடக்கிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.