“ஒன்றிணைக்கப்படும் பொதுத்துறை வங்கிகள்”திடீர் காரணம் என்ன??
‘பொதுத்துறை வங்கிகளான பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படும்’ என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த இணைப்பின்மூலம், இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக உருவெடுக்க உள்ளது.
மத்திய அரசு, நிதித் துறையில் பல்வேறு மாற்றங்களைச் செய்துவருகிறது. இதன் ஒரு பகுதியாக, பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவை ஒன்றிணைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய நிதித் துறை செயலர் ராஜீவ் குமார்,மூன்று வங்கிகள் இணைவதன்மூலம், இந்தியாவில் மூன்றாவது மிகப்பெரிய வங்கியாக மாறும்.
தனியார் வங்கிகளுடன் போட்டிபோட்டுக்கொண்டு வாடிக்கையாளருக்கு சிறந்த சேவை வழங்கும். மூன்று வங்கிகள் ஒன்றிணைக்கப்படுவதால், மூன்று வங்கியிலும் பணியாற்றும் பணியாளர்கள் எந்த வகையிலும் பாதிக்கப்பட மாட்டார்கள். ஏற்கெனவே, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைத்தபோதும், பணியாளர்கள் பாதிக்கப்படவில்லை.
இணைப்புக்குப் பின்னரும், ஒவ்வொரு வங்கியும் தனிப்பட்ட முறையில் சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. இதே முறையில் பரோடா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கிகளும் சிறப்பாகச் செயல்படும்” என்றார்.
DINASUVADU