#Breaking:அக்னிபத் திட்டம்;இந்த பிரிவில் 10% ஒதுக்கீடு – மத்திய அரசு அறிவிப்பு!

Published by
Edison

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு.முப்படைகளில் இளைஞா்கள் தற்காலிகமாகப் பணி செய்வதற்கு ‘அக்னிபத்’ என்ற புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில்,இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். ‘அக்னிபத்’ ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கான வயது வரம்பு குறைந்தபட்சம் 17.5 அதிகபட்சமாக 23-ஆக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும்,மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில்,ஜம்மு காஷ்மீர்,டெல்லி,அரியானா,உத்தர பிரதேசம்,பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனிடையே,பீகாரில் 12 மாவட்டங்களில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் திட்டத்தின் கீழ் அக்னி வீரர்களை தேர்வு செய்ய இரண்டு நாட்களில் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்தார்.அக்னிபத் திட்டத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கான பயிற்சி டிசம்பர் மாதத்தில் மையங்களில் நடைபெறும் என்றும் செயலில் உள்ள சேவை 2023 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கும் எனவும் கூறியுள்ளார். joinindianarmy.nic.in -ல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில்,அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தொடரும் போராட்டங்களுக்கு மத்தியில்,இத்திட்டத்தின்கீழ் துணை ராணுவத்தில் சேரும் அக்னிபத் வீரர்களுக்கு மத்திய ஆயுதப்படை,அசாம் ரைபிள்ஸ் பிரிவில் 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும்,சிஏபிஎஃப் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அக்னிவீரர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச நுழைவு வயது வரம்பில் 3 ஆண்டுகள் தளர்வு அளிக்க உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.அதன்படி,அக்னிபத் திட்டத்தின் முதல் தொகுதிக்கு இந்த தளர்வு 5 வருடங்களாக இருக்கும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago