UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ்.!

UPSC

கடந்த மாதம் UPSC நடத்திய சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வின் 2ம் பகுதியான CSAT எனப்படும் தகுதித் தேர்வின் கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைக்கக் கோரிய மனு மீது முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

GATE மற்றும் IIT-JEE தேர்வுகளைப் போல், இதில் கேட்கபட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து தெரிவித்துள்னர். ஜூன் 8 அன்று, 4,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட மாணவர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் பொது நல மனு (பிஐஎல்) தாக்கல் செய்தனர்.

அதில், கட்-ஆஃப் 33 சதவீதத்தில் இருந்து 23 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்கள் தாக்கல் செய்த அந்த பொது நல மனுவை விசாரித்து, கட் ஆஃப் அளவை 33% இருந்து 23% குறைப்பதற்கு முடிவெடுக்க UPSC-க்கு மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்