வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா: கேரளா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கேரளாவில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேரளா பயணம் செய்துள்ளார்.

mk stalin vaikom 100

கேரளா : வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழா நாளை (டிசம்பர் 12) நடைபெறவுள்ள நிலையில், அதில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 11)  கேரளாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

1924 – 1932 ஆம் ஆண்டுகளில் கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் வைக்கத்தில், மகாதேவர் கோயிலைச் சுற்றியிருந்த தெருக்களில், தாழ்த்தப்பட்டவர்கள், ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் நடமாடக் கூடாது என்றிருந்த தடையை நீக்க, போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பங்கேற்க தமிழகத்தில் இருந்து பெரியார் பங்கேற்று வெற்றிபெற்றார். எனவே, போராட்டத்தில் வெற்றிபெற்ற நிலையில் வைக்கத்தில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டது மட்டுமின்றி, 1994-ம் ஆண்டு நினைவகம் திறக்கப்பட்டது. அது பழையமான காரணத்தால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதனை ரூ.8.14 கோடியில் சீரமைக்க நிதி உதவி வழங்கியிருந்தார்.

விழா நடைபெறும் இடம்

நினைவகம் மறுசீரமைக்கப்பட்ட நிலையில், நாளை இந்த நினைவகத்தை திறப்பதற்கான “வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா” கேரளாவின் வைக்கம் பகுதியில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைவகத்தை திறந்து வைக்கவும் இருக்கிறார். இந்த நிகழ்ச்சி கேரளாவின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் காலை 10 மணி அளவில் நடைபெறவிருக்கிறது.

முதல்வர் வருகை

வைக்கம் போராட்டம் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, வைக்கத்தில் நடைபெறும் பெரியார் நினைவகம் மற்றும் நூலக திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரளாவுக்கு சென்றார். கேரளாவுக்கு அவர் வருகை தந்தவுடன் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர். முருகேசன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்படும் செய்யப்பட்டது. 

இதனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை பெரியார் நினைவகம் மற்றும் நூலகம் திறந்து வைக்கவும் இருக்கிறார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” நூறாண்டுகளுக்கு முன்பு நமது சமூகம் எப்படியிருந்தது, இப்போது நாம் எங்கு வந்தடைந்திருக்கிறோம் என்று சற்று நினைத்துப் பாருங்கள். இந்த மாற்றங்களுக்கு விதை தூவிய வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் நாளை நான் நேரில் கலந்துகொள்கிறேன்” என காணொளி ஒன்றை வெளியீட்டு அறிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்