ஹீலியம் பலூனில் தனது வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகள் மற்றும் தாங்கள் செய்யக்கூடிய வேடிக்கை தனமான காரியங்களை வீடியோவாக வெளியிடுகின்றனர். குறிப்பாக யூடியூபில் பலர் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த கவுரவ் சோன் எனும் யூடியூப் வைத்து நடத்தக் கூடிய இளைஞர் ஒருவர் தினமும் வித்தியாசமான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
40 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளதோடு இவரது வீடியோக்களும் அதிக அளவில் பார்க்கப்பட கூடியவையாக இருக்கும். இந்நிலையில் அண்மையில் இவரது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டபடி வீடியோ ஒன்றை எடுத்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் மிருக வதை செய்வதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த வீடியோவிற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, உரிய பாதுகாப்பு வசதியுடன் தான் நாய்க்குட்டி பறக்கவிட்டு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தான் மிருக வதை செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்ததுடன் இதன் மூலம் பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இருப்பினும் தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் யூடியூபர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இம்மாதம் 25-ஆம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவாகாரங்கள் துறை அமைச்சர் கிரண்…
அமெரிக்கா : உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு இந்திய நேரப்படி சரியாக மாலை…
மும்பை : டெல்லி அணி நிர்வாகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக விளையாடி வந்த ரிஷப் பண்டை…
இஞ்சி தேன் சாப்பிடுவதால் இவ்வளவு ஆரோக்கிய நன்மைகளா ? சென்னை -இஞ்சி தேன் சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய…
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…