14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பிரபல டிக்டாக் பிரபலம்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இணையத்தில்தான் உலா வருகின்றன. இணையத்தில் பெண்கள் ஆண்களுடன் ஏற்படும் உரையாடல் நாளடைவில் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக சிறு பெண்கள் முதல் முதிய வயது பெண்கள் வரை பலரும் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர்.
அந்த வகையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் பார்கவ். டிக் டாக் பிரபலமான இவர் ‘Fun Bucket Bhargav’ என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பார்கவ் வீட்டிற்கு அருகே உள்ள காலனியை சேர்ந்த சிறுமி ஒருவர் இவரது வீடியோக்களை பார்த்து, பார்கவ்வின் ரசிகையாக மாறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அந்த சிறுமி 14 வயது சிறுமி அவருடன் தொடர்ந்து பழகி வந்துள்ளார். இதனை அடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக அந்த சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அச்சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது பெற்றோர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், இதுகுறித்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தபோது, டிக் டாக் பிரபலம் பார்கவ் தன்னிடம் பலமுறை பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக அச்சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமி அளித்த தகவலை தொடர்ந்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில், போலீசார் பார்கவ்வை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…
ஜப்பான் : மியான்மர்-தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பேரழிவின் அதிர்ச்சியிலிருந்து உலகம் இன்னும் மீளவில்லை. அதற்குள் ஜப்பான் ஒரு பெரிய…