Categories: இந்தியா

பிரபலங்களின் டிவிட்டர் ‘புளு-டிக்’ அங்கீகாரம் நீக்கம்..! முழு விவரம் இதோ..!

Published by
செந்தில்குமார்

ட்விட்டர் நிறுவனம்  முதல்வர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், விராட் கோலி உள்ளிட்ட பல பிரபலங்களின் டிவிட்டர் புளு-டிக்குகளை நீக்கியுள்ளது.

ஸ்மார்ட்போன்வாசிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக இயங்கி வரும் சமூகவலைத்தள செயலிகளில் ஒன்று டிவிட்டர். உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் இந்த டிவிட்டர் செயலியை வாங்கியதில் இருந்து அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கொண்டு வந்து பயனர்களை அதிரவைத்து வருகிறார்.

டிவிட்டர் புளு -டிக் :

முதலில் பல துறைகளில் பிரபலமாக இருக்கும் நபர்களுக்கு அவர்களின் அடையாளம் உறுதி செய்யப்பட்டு இலவசமாக புளு டிக் எனப்படும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அந்த புளூ டிக்கை கட்டணம் என அறிவித்து, யார் வேண்டுமானாலும் மாத தவணை செலுத்தி அடையாளங்களை சமர்ப்பித்து பெற்றுக்கொள்ளலாம் என அறிவித்து சிலருக்கு அதிர்ச்சியையும், பலருக்கு மகிழ்ச்சியையும் கொடுத்தது. ஆனால், தற்பொழுது மாதத்தவனை கட்டணம் செலுத்தாதவர்கள் மிக பெரிய பிரபலமாக இருந்தாலும் அவர்களின் புளூ டிக்கை எலான் மஸ்க் நீக்கிவிட்டார்.

அந்த வகையில், விளையாட்டு / சினிமா / அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பல பிரபலங்களின் புளு-டிக்குகளை டிவிட்டர் நீக்கியுள்ளது.

ட்விட்டர் புளு-டிக்குகள் நீக்கப்பட்ட பிரபலங்களின் பட்டியல் இதோ:

அரசியல் பிரபலங்கள்: 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அரசியல் பிரபலங்களின் டிவிட்டர் ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

Blue tick 1

விளையாட்டு வீரர்கள்:

இது தவிர, மகிந்திர சிங் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ரொனால்டோ, சாய்னா நேவால் போன்ற விளையாட்டு வீரர்களும் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்குகளை இழந்துள்ளனர்.

நடிகர்கள் & நடிகைகள் :

பிரபல தமிழ் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ்,  நடிகைகள் காஜல் அகர்வால், சமந்தா, தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரது டிவிட்டர் கணக்குகளில் இருந்த ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஷாருக் கான், அமிதாப் பச்சன், சல்மான் கான், அஜய் தேவ்கன், ஆலியா பட், அக்‌ஷய் குமார், கஜோல், மாதுரி தீட்சித், அனுஷ்கா சர்மா மற்றும் அனில் கபூர் மற்றும் பலர் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்குகளை இழந்துள்ளனர்.

தொழில்நுட்ப நிறுவங்களின் தலைவர்கள் :

இதனைத்தொடர்ந்து பில் கேட்ஸ், ரத்தன் டாடா மற்றும் நாராயண மூர்த்தி போன்ற தொழில்நுட்ப உலகப் புகழ்பெற்ற தலைவர்கள் மற்றும் போப் உள்ளிட்டோர் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் இருந்து ப்ளூ டிக்குகளை இழந்துள்ளனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மாணவி பாலியல் விவகாரம் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது என்ன?

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில், அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல்…

18 minutes ago

திருவாதிரை களி ரெசிபி அசத்தலான செய்முறை இதோ..!

சென்னை :திருவாதிரை ஸ்பெஷல் களி  ரெசிபி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி-…

34 minutes ago

தனுஷ் – நயன்தாரா வழக்கு… இறுதி விசாரணையை ஒத்தி வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!

சென்னை: நடிகை நயன்தாராவின் 'Beyond the Fairy Tale' ஆவணப்படத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தின் காட்சிகளை அனுமதியின்றி பயன்படுத்தியதாகக்…

47 minutes ago

கிளப்பில் கலக்கும் யாஷ்… பிறந்தநாள் ட்ரீட்டாக வெளிவந்த ‘டாக்ஸிக்’ க்ளிம்ப்ஸ் வீடியோ!

சென்னை: ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிப்பில் 'KGF 2' திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு வெளியானதைத் தொடர்ந்து அவரது அடுத்த…

49 minutes ago

பொல்லாத ஆட்சிக்கு சாட்சியே பொள்ளாட்சி சம்பவம் தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் இன்று நடைபெற்று வரும் நிலையில்,  அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த…

2 hours ago

‘3 மாதத்தில் மகளிர் உரிமைத்தொகை’ துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை: மகளிருக்காக தமிழக அரசு சார்பில் 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகை' திட்டதின் கீழ், ஒவ்வொரு மாதமும் 15ம் தேதி மகளிர்…

2 hours ago