போரின் வெற்றி விழா கொண்டாட்டம்….பிபின் ராவத் இறுதியாக பேசிய காணொளி வெளியீடு!

Published by
பாலா கலியமூர்த்தி

முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் இறப்பதற்கு ஒருநாள் முன்னதாக பேசிய காணொளி வெளியீடு. 

1971-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதின் 50 ஆண்டு பொன்விழா தினம் டெல்லியில் உள்ள இந்தியா கேட் பகுதியில் இன்று கொண்டாடப்பட்டு ‘ஸ்வர்னிம் விஜய் பர்வ்’ திறக்கப்பட்டது.

இந்த விழாவை தொடங்கி வைத்து பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்தை இழந்து நாடு சோகத்தில் மூழ்கி இருப்பதால் இவ்விழா எளிமையாக கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

வங்கதேசத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட இந்தியா பெரும் பங்காற்றியுள்ளது என்றும் கடந்த 50 ஆண்டுகளில் வங்கதேசம் வளர்ச்சி பாதையில் முன்னேற்றம் அடைந்திருப்பதை கண்டு இந்தியா மகிழ்ச்சி கொள்கிறது என்றும் கூறினார். இதனைத்தொடர்ந்து, பொன்விழாவையொட்டி முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பேசியிருந்த காணொளி பதிவு வெளியிடப்பட்டது.

இதில் வங்கதேசத்தில் நடந்த போரின் வெற்றிக்கு இந்திய பாதுகாப்பு படை வீர்ரகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். 1971 போரில் இந்தியாவின் 50 ஆண்டு வெற்றியை நினைவுகூரும் வகையில், இந்த சிறப்பு சந்தர்ப்பத்தில், நான் துணிச்சலானவர்களை நினைவு கூர்கிறேன். அவர்களின் தியாகங்களுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

தமிழகத்திற்கு புறப்படுவதற்கு ஒருநாள் முன்பாக கடந்த டிசம்பர் 7ஆம் தேதி இந்த காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிபின் ராவத், அடுத்த நாள் (டிசம்பர் 8) குன்னூர் அருகே எதிர்பாராத விதமாக நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

SRHvDC : 300 அடிக்குமா ஹைதராபாத்? கடப்பாரை பேட்டிங்கின் அதிரடியை சமாளிக்குமா டெல்லி?

விசாகப்பட்டினம் : கடந்த ஆண்டு எப்படி அதிரடியாக ஹைதராபாத் அணி விளையாடியதோ அதைப்போல தான் இந்த சீஸனும் விளையாடி வருகிறது. உதாரணமாக…

3 minutes ago

பாஜக கூட கூட்டணி வைத்தால் கதை முடிந்துவிடும்! இபிஎஸ்க்கு திருமாவளவன் எச்சரிக்கை!

திருவண்ணாமலை : மாவட்டத்தில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி நேற்று நடைபெற்றதில். அதில் கலந்து கொண்ட அக்கட்சி தலைவர் திருமாவளவன் "…

28 minutes ago

மியான்மரை புரட்டிப்போட்ட நிலநடுக்கம்! மீட்பு பணியில் சிக்கல்கள்…தற்போதைய நிலவரம் என்ன?

பாங்காக் : கடந்த மார்ச் 28-ஆம் தேதி மியான்மர் நாட்டை 7.7 ரிக்டர் அளவில் பதிவாகிய சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெரும் சேதத்தையும்…

1 hour ago

யாருனு தெரியலையா? லுக் விட்ட சாய் கிஷோர்… டென்ஷனான ஹர்திக் பாண்டியா!

குஜராத் : ஐ.பி.எல். 2025 சீசனில் நேற்று (மார்ச் 29) நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி.) மற்றும் மும்பை…

2 hours ago

GT vs MI : இறுதி வரை போராட்டம்… திணறிய மும்பை.! குஜராத் அணி அபார வெற்றி.!

அகமதாபாத் :  இந்தியன் பிரீமியர் லீக்கின் 18வது சீசனின் ஒன்பதாவது போட்டி இந்ரயு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

11 hours ago

சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…

சென்னை : சென்னை ஜவஹர்லால் நேரு மைதானத்தில் நாளை பிரேசில் லெஜண்ட்ஸ் (Brazil Legends) மற்றும் இந்தியா ஆல்-ஸ்டார்ஸ் (India All-Stars)…

12 hours ago