பிரதமர் மோடியின் பிறந்தநாளை தினமும் கொண்டாடுங்கள்…! – ப.சிதம்பரம்
பிரதமர் மோடியை விமர்சித்து ட்வீட் செய்த முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், மத்திய அரசு குறித்து, மத்திய அரசு கொரோனா வைரஸ் தொற்றை கையாளும் முறை, மத்திய அரசின் தடுப்பூசி கொள்கைகள் குறித்தும் விமர்சித்து கருத்து பதிவிடுவதுண்டு.
அந்த வகையில், தற்போது, பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசு கடந்த சில நாட்களாகவே சில ஏற்பாடுகளை செய்திருந்தது. அதன்படி இந்தியா முழுவதும் பல்வேறு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதன்படி நேற்று ஒரே நாளில் இரண்டரை கோடி தடுப்பூசி சாதனை படைக்கப்பட்டது. இதற்கு முன்பதாக ஒரு கோடி தடுப்பூசி ஒரேநாளில் ஒருகோடி சாதனையாக கருதப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சிதம்பரம் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரதமர் மோடியின் பிறந்த நாளான நேற்று ஒரே நாளில் இந்தியா முழுவதும் இரண்டரை கோடி கொரோனா தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
உத்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குஜராத், கர்நாடகத்தில் மோடி பிறந்தநாளன்று தினசரி சராசரியை விட அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. பிரதமர் மோடி பிறந்த நாளைத் தவிர மற்ற நாட்களில் செயல்படாத மாநிலங்களாகவே இந்த மாநிலங்கள் இருந்து வருகின்றன. எனவே, பிரதமர் நரேந்திர மோடி அவரது பிறந்த நாளை தினம் கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
BJP ruled states — UP, MP, Guj & Kar — “perform” on the PM’s birthday and vaccinate many times the daily average.
On other days, they are “non-performing” states.
I wish the PM celebrated his birthday every day.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 18, 2021