Categories: இந்தியா

தீபாவளி வந்தாச்சு!! இந்த முறை உங்க வீட்டை இந்த மாதிரி அலங்காரம் செய்து கொண்டாடுங்கள்!

Published by
கெளதம்

வரும் நவம்பர் 12ஆம் தேதி, தமிழ் மாதத்தின்படி, வரும் ஐப்பசி மாதம் 26ஆம் நாள் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முந்தைய நாள் தீபாவளி தினமாக கொண்டாடப்படுகிறது.

பண்டிகைக் காலம் என்பது வீடுகளை அழகான அலங்காரங்களால் அலங்கரிக்கும் காலமாகும். தீபாவளியை தொடர்ந்து கார்த்திகை பண்டிகை வருகிறது, திருவிழாக் காலம் வந்துவிட்டாலே வீடு முழுக்க அலங்காரங்கள் என்று கண்ணை சொக்க வைப்பது போல் சும்மா ஜோலி ஜோலினு ஜொலிக்கும்.

ஒளியின் திருவிழா என்றும் அழைக்கப்படும் தீபாவளி பண்டிகையின் போது, குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் வருகையை முன்னிட்டு, வீட்டை அற்புதமாக மாற்றுவதற்கு அலங்காரங்ம் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்நிலையில், மலிவு விலையில் மகிழ்ச்சி நிறைந்த உங்கள் வீட்டை அலங்காரம் செய்து இந்த தீபாவளியை கொண்டாடுவோம்.

விளக்குகள்

முதலில் மங்களகரமாக விளக்குகளில் இருந்து தொடங்குவோம், அதில் பாரம்பரிய எண்ணெய் விளக்குகள் தீபாவளிக்கு முக்கியம். வீடு முழுக்க தீபம் ஏற்றி வைப்பதால் வீடு வண்ணம் மிகுந்து ஒளிரச்செய்யும். அதுவே அந்த விளக்குகளை உங்கள் வீட்டில் கோலமிட்டிருக்கும் வடிவத்திற்கு ஏற்ப வரிசை கட்டி வைத்தால் கூடுதல் அழகு கூடி வரும்.

இந்த ஆண்டு தீபாவளியை, சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில், மலிவு விலையில் மண், செராமிக் டையாக்கள் மற்றும் மறுசுழற்சி செய்யக்கூடிய உலோக பாத்திரங்கள் மூலம் உருவாக்க பட்டிருக்கும் விளக்குகளை பயன்படுத்தி உங்கள் விருந்தினர்களை வரவேற்கவும்.

தீபாவளி : ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வரலாறு.!

பூஜை அறையில் விளக்கு ஏற்றுதல்

தீபாவளியின் போது, முக்கியமாக பூஜை அறை பண்டிகை மையமாக மாறும். அப்படிப்பட்ட பூஜை அறையை தெய்வீக சூழலாக உருவாக்க மாலைகள், மலர்கள் மற்றும் தொங்கு விளக்குகளால் அதை அலங்கரிக்கலாம்.

மலர்கள்

மேலும், நம் வீட்டை சிறப்பாக மாற்றுவதற்கு மலர்கள் நிறைந்த தோரணங்களை வீட்டின் வாசல், பூஜை அறையின் தூண்களில் கட்டி அழகாக்கலாம். ஆனால், பண்டிகையை முன்னிட்டு மலர்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. இத்னால், ஆன்லைனில் கிடைக்கும் செயற்கை மாலைகளை வாங்கி கட்டி கொண்டாடுங்கள்.

தீபாவளிக்கு மொறு மொறுனு ஒரு ரெசிபி..! இதோ உங்களுக்காக..!

மின் விளக்குகள்

விளக்குகளை ஒளிர செய்வதை தாண்டி, வீடு முழுக்க மின் விளக்குகளால் அலங்கரித்து, கூடுதல் அழகை சேர்க்கலாம். வீட்டு மாடிகளில் சின்ன சின்ன மின் விளக்குகளை ஒளிர செய்து இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள்.

மெழுகுவர்த்தி

மண் விளக்குகள் வேண்டாம் என்றால், மெழுகுவர்த்தி பயன்படுத்தி வீட்டின் வாசலை கண்கவர செய்யுங்கள். வீட்டின் வாசல் மற்றும் பூஜையறை முன்பு கோலமிட்டு அதன் மீது மெழுகுவர்த்தியை பொருத்தி வைப்பதால் மேலும் சிறப்பாக மாற்றலாம்.

Diwali 2023 : தீபாவளி தினத்தில் பிரபலமான இந்த 5 இடங்களை மட்டும் மறந்துவிடாதீர்கள்..

ஸ்டிக்கர்ஸ்

வெறும் சுவர்களில் தீபம் ஏற்றமால் விட்டால், அது எப்படி பிரகாசிக்கும் மக்களே? அதற்க்கும் ஒரு ஐடியா இருக்கு. ஆன்லைன்களில் கிடைக்கும்  தீபம் எறியக்கூடிய விளக்குகளை வாங்கி நம் வீட்டின் உல் சுவர்களின் ஓட்டி, அதிலும் ஒளிரும்படி செய்து இந்த தீபாவளியை மிகவும் பிரமாண்டமாக கொணடாடலாம்.

தீபாவளி என்பது மதக் கொண்டாட்டம் மட்டுமல்ல. இது ஒரு கலாச்சார மற்றும் சமூக நிகழ்வாகும், இது ஒற்றுமை உணர்வை உண்டாக்குவது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு, உங்கள் வீட்டை பாரம்பரிய மற்றும் சாதாரண அலங்காரங்களுடன் கோலாகலமாக கொண்டாடுங்கள்.

Published by
கெளதம்

Recent Posts

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

46 minutes ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : காவல் ஆணையருக்கு நீதிபதிகள் வைத்த அடுக்கடுக்கான கேள்விகள்!

சென்னை :  அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…

2 hours ago

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

3 hours ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

3 hours ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

3 hours ago