அனைத்து ரயில்களிலும் விரைவில் சிசிடிவி, வைஃபை வசதி : ரயில்வே அமைச்சர் பியூஷ்கோயல்அறிவிப்பு
ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும், வைஃபை வசதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களையும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும், அனைத்து வசதிகள் உள்ளதாகவும் ஆக்க அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் அனைத்து ரயில்பெட்டிகளிலும் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். அனைத்து ரயில்களிலும் வைஃபை இணையத்தள வசதி செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். ரேபரேலி ரயில் பெட்டித் தொழிற்சாலையை உலகிலேயே மிகப்பெரிய தொழிற்சாலையாக அமைக்க ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாகவும் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.