10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு…தகவல் போலியானது CBSE விளக்கம்.!

cbse results Tom

சி.பி.எஸ்.இ. 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடு, தகவல் உண்மையில்லை என சி.பி.எஸ்.இ விளக்கம்.

இந்த ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 10 ஆம் வகுப்பு தேர்வுகள், பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த தேர்வுகளை, கிட்டத்தட்ட 21.8 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். இதுபோன்று, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) 12-ஆம் வகுப்புத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி தொடங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடத்தப்பட்டன. 12ம் வகுப்பு பொதுத்தேர்வை சுமார் 16.9 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர்.

இந்த சமயத்தில்  CBSE 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடுவதற்கான சரியான தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படாமல் இருந்தது. அதுமட்டுமில்லாமல் சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளுக்கான முடிவுகளை வாரியம் ஒரே நாளில் வெளியிடுமா என்பது குறித்து சந்தேகங்கள் எழுந்தது. இந்த நிலையில், சி.பி.எஸ்.இ 10, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று வாரியம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என இணையத்தில் வெளியான அறிக்கை போலியானது என CBSE ட்விட்டரில் விளக்கம் கொடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்