இன்று சிபிஎஸ்இ பொதுத்தோ்வுகளை ரத்து குறித்து முடிவு..!
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளை ஜூலை 1-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதற்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், தோ்வுகளை நடத்த மாணவா்களின் பெற்றோா் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.
இந்நிலையில், பொதுத் தோ்வு நடத்துவதற்கு எதிராக பெற்றோா் சிலா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனா். அதில், இந்தியாவில் கொரோனா பரவல் ஜூலை மாதத்தில் உச்சநிலையை அடையும் என எய்ம்ஸ் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், பொதுத் தோ்வுகளை நடத்துவது லட்சக்கணக்கான மாணவா்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகும்.
மேலும், 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தேர்வை ரத்து செய்து, நடத்தப்படாமல் இருக்கும் தோ்வுகளுக்கு உள்மதிப்பீட்டுத் தோ்வு அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க உத்திரவு விட வேண்டும் என அந்த மனுவில்கூறப்பட்டது.
இந்நிலையில், 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளை ரத்து குறித்து இன்று முடிவு செய்யப்படும் என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசும், சிபிஎஸ்இ-யும் பதில் கொடுத்தனர். இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம் வழக்கை ஜூன் 25-ம் தேதி (அதாவது நாளை ) ஒத்திவைத்து உத்தரவிட்டது.