சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்ட 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகள்…!
சிபிஎஸ்இ நிர்வாகம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான கேள்விகளை வெளியிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததை கருத்தில்கொண்டு,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.இதனால்,மாணவர்களுக்கு பள்ளிகளால் நடத்தப்படும் உள் மதிப்பீட்டின் அடிப்படையில் நடப்பு ஆண்டிற்கான மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கை குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
முன்னதாக அட்டவணைப்படுத்தல் செயல்முறையை நிறைவு செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 11 ஆக இருந்தது.எனினும்,கொரோனா பரவல் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை மனதில் கொண்டு தேதி ஜூன் 30 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ நிர்வாகம் சமீபத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மதிப்பெண்களை அட்டவணைப்படுத்துவதற்கான கொள்கையை அறிவித்தது.அதன்படி,
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பின் முடிவை எவ்வாறு அறிவிக்கும்?
சிபிஎஸ்இ நிர்வாகம் உருவாக்கிய ‘ஒரு மதிப்பெண்’ அளவீடுகளின் அடிப்படையில் பத்தாம் வகுப்பு வாரியத்தின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்.
ஒரு மதிப்பெண் அளவீடுகளின் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட முடிவில் எந்தவொரு மாணவரும் திருப்தி அடையவில்லை என்றால், சம்பந்தப்பட்ட மாணவருக்கு சிபிஎஸ்இ மூலம் என்ன தீர்வு வழங்கப்படும்?
ஒதுக்கப்பட்ட மதிப்பெண்களில் திருப்தி அடையாத எந்தவொரு மாணவருக்கும்,சிபிஎஸ்இ நிர்வாகத்தால் தேர்வு நடத்தப்பட்டு அதன் அடிப்படியில் மதிப்பெண் வழங்கப்படும்.
எந்தவொரு மதிப்பீட்டிலும்,எந்தவொரு மாணவரும் திருப்தி அடையவில்லை என்றால்,மாணவர்களின் மதிப்பீட்டை எவ்வாறு தேர்வு செய்வார்கள்?
பள்ளி நடத்திய மதிப்பீடுகளில் எந்தவொரு மாணவர்களும் திருப்தி அடையவில்லை என்றால்,பள்ளி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன்,அல்லது தனிப்பட்ட முறையில் சிறப்பு வகுப்புகள் மூலம் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண் விபரங்களை மாணவர்கள்,சிபிஎஸ்இயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அவ்வாறு,பதிவு செய்த ஒவ்வொரு பாடத்தின் அதிகபட்ச மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பீடு வழங்கப்படும்.