Categories: இந்தியா

இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.!

Published by
மணிகண்டன்

பல்வேறு சமூக வலைத்தளங்களில் செயல்படும் போலி கணக்குகளால் ஒரிஜினல் கணக்காளர்கள் மற்றும் அவர்களை பின்தொடரும் சமூக வலைதளவாசிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.  இத போலி கணக்குகள் மூலம் பல்வேறு சமயம் போலியான தகவல் பரப்பப்பட்டு அதனால் உரிய கணக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க தனிப்பட்ட முறையிலும், அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது,  மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE கல்வி வாரியம் தங்கள் பெயரில் X (டிவிட்டர்) சமுக வலைத்தளத்தில் செயல்ப்பட்டு வரும் சுமார் 30 போலி X சமூக வலைதள கணக்குகளை வெளியிட்டு உள்ளது.  இந்த போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் புறப்பட்டு வருவதாகவும் தங்கள் அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.

தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @cbseindia29 எனும் X  சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபடி, போலி X கணக்குகள் விவரங்கள்…

  • @Cbse_official
  • @CBSEWorld
  • @cbse_news
  • @CbseExam
  • @CBSENewsAlert
  • @cbse_nic_in
  • @cbse_result
  • @CBSEINDIA
  • @cbsezone
  • @cbse_updates

உள்ளிட்ட 30 X சமூக வலைதள பக்கங்களை சிபிஎஸ்இ வாரியம் தனது அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

போலியான கணக்குகளை பயனர்கள் பின்தொடர்ந்து ஏமாற வேண்டாம் என சிபிஎஸ்இ வலியுறுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் CBSE தொடர்பான விஷயங்கள், நம்பகமான தகவல்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையான பக்கமான @cbseindia29 தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதால் அதனை பின்பற்றுமாறு வாரியம் தனிநபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள சமயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என எடுத்துக்காட்டுகிறது. தவறான தகவல்கள் தொடர்ந்து பரவி வருவதால், இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஐபிஎல் 2025 : வெளியானது மெகா ஏலம் விதிகள்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…

5 hours ago

தமிழக அமைச்சரவையில் மாற்றம்! துணை முதல்வரானார் உதயநிதி ஸ்டாலின்!

சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…

16 hours ago

ENGvsAUS : “நான் நினைத்தபடி திரும்பி வந்திருக்கிறேன்”! ஜோப்ரா ஆர்ச்சர் நெகிழ்ச்சி பேட்டி..!

லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…

21 hours ago

ENGvsAUS : “அவரிடமிருந்து இங்கிலாந்து அதை தான் எதிர்பார்க்கிறது”! ஸ்டூவர்ட் பிரோட் பெருமிதம்!

சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…

21 hours ago

தமிழக மீனவர்களை விடுவிக்க அமைச்சர் ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம்.!

டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…

21 hours ago

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டல்.? நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு.!

பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…

21 hours ago