சிபிஎஸ்சி பொதுத்தேர்வு 2021 – மாணவர்களுக்கான அறிவிப்பு..!
சிபிஎஸ்சி பொதுத் தேர்வு குறித்த பல்வேறு மாறுபட்ட கருத்துகள் பரப்பப்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரால் மாணவர்களுக்கு அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படும் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில், இது குறித்ததான முற்றுப்புள்ளிகளுக்கு மத்திய அமைச்சர் ரமேஷ் போக்கிரி மற்றும் தேர்வாணையம் சார்பில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேதிகள் மற்றும் எந்த இடத்தில் நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறித்த நேரத்தில் தகவல்கள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ஆம் வகுப்பு தேர்வுகளின் தேதிகள் உட்பட தேர்வும் முடிந்துவிட்டது என தற்போது வெளியாகியுள்ள செய்தி தவறானது எனவும், இது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே பதற்றத்தை உருவாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றின் போது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நிலை குறித்து தேர்வு வாரியம் நன்கு அறிந்து இருப்பதாகவும், எனவே சிபிஎஸ்சி எந்த முடிவெடுத்தாலும் அது அனைத்து தரப்பினருடனும் கலந்தாலோசித்து அதன் பின்பே உறுதிப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் தேர்வு நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த தகவல்கள் குறித்த நேரத்தில் வெளியிடப்படும் எனவும் இதற்கு முன்பதாக சிபிஎஸ்சி தேர்வு தேதிகள் குறித்து ஊடகங்களில் வெளியாகிய கருத்துக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ஆஃப்லைன் அல்லது எழுத்து முறையில் தேர்வுகள் நடத்தப்படும் எனவும், எப்போது நடத்தப்பட வேண்டுமென சிபிஎஸ்சி தேர்வு தேதிகள் குறித்த ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நேற்று மாணவர்களுடன் உரையாற்றும்போது கல்வி அமைச்சர் ரமேஷ் பேக்ரியால் அவர்கள் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான சிபிஎஸ்இ போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு போதுமான நேரம் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் மார்ச் மாதத்தில் தேர்வுகளை நடத்த வேண்டிய கட்டாயம் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.