கொரோனா மத்தியில் ஏராளமான மாணவர்கள் வரவிருக்கும் சிபிஎஸ்இ தேர்வுகள் குறித்து கவலைப்படு தொடங்கிவிட்டனர். இந்நிலையில், சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடர்பான அனைத்து மாணவர்களின் கேள்விகளையும் தெளிவுபடுத்தும் விதமாக மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் போக்ரியால், வருகின்ற பிப்ரவரி வரை எந்த தேர்வுகளும் நடைபெறாது. கொரோனா வைரஸ் நோய் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள், ஆசிரியர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. இதை கருத்தில் கொண்டு பொதுத் தேர்வுகள் பிப்ரவரி மாதம் நடைபெறாது என்று தெரிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்யப்படக்கூடாது என்று பெரும்பான்மையான விரும்புகிறார்கள். ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், தேர்வுகள் நடைபெறாது, ஆனால், அனைத்து கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுடன் தேர்வுகள் நடைபெறும் என்று அவர் கூறினார்.
தேர்வுக்கான சரியான தேதிகள் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், தேர்வுகள் நடத்துவது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும். தற்போது, 17 மாநிலங்கள் பள்ளிகளை மீண்டும் திறக்க முடிவு செய்துள்ளதாக ரமேஷ் போக்ரியால் தெரிவித்தார்.
சமீபத்தில் பேசிய ரமேஷ் போக்ரியால், சிபிஎஸ்இ தேர்வுகள் வழக்கம் போல் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடக்கும், ஆனால் கொரோனா வழிகாட்டுதலின் கீழ் நடக்கும். இருப்பினும், அதே நேரத்தில் நிலை கட்டுப்பாட்டில் இல்லை என்றால், தேர்வு தாமதமாகலாம் என தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : அதிரடி அணிக்கு என்ன ஆச்சுபா என்பது போல சமூக வலைத்தளங்களில் ஹைதராபாத் அணியை பார்த்து தான் பலரும்…
அமெரிக்கா : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தில் எலான் மஸ்க் தற்போது முக்கிய பங்கு வகித்து வருகிறார். அவர் "டிபார்ட்மெண்ட்…
சென்னை : தமிழ்நாடு அரசு நீண்ட காலமாக நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க.…
சென்னை : சென்னை கோடம்பாக்கத்தில் ‘எம்புரான்’ திரைப்பட தயாரிப்பாளருக்கு சொந்தமான கோகுலம் சிட்பண்ட் நிறுவனத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையில்…
சென்னை : வக்ஃபு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் சார்பில், தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்…
சென்னை : பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகர் தர்ஷஷனுக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன் ஒருவருக்கும் இடையே பார்க்கிங்…