#BREAKING: CBSE 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து -மத்திய அரசு அறிவிப்பு..!
கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காரணமாக CBSE 10-ஆம் வகுப்பு தேர்வுகளை ரத்து எனவும் CBSE 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்தது. மேலும், ஜூன் 1 ஆம் தேதி கொரோனா தொற்றின் நிலை குறித்து மதிப்பாய்வு செய்யப்பட்டு பின்னர் பொதுத் தேர்வுகளின் தேதிகள் அறிவிக்கப்படும் என அறிவித்தனர்.
இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சார்பாகவும், பெற்றோர்கள் சார்பாகவும் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு அனைத்தும் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை நடத்துவது தொடர்பாக மத்திய அரசு என்ன முடிவு செய்திருக்கிறீர்கள்..? என்ற ஒரு கேள்வியை நீதிபதிகள் எழுப்பினார்.
அதற்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவு எடுத்து விடுவோம் எனக் கூறி வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய அரசு தலைமை வழக்கறிஞர் வேணுகோபால் சார்பாக கோரிக்கை வைத்தார். இதைத்தொடர்ந்து, வரும் வியாழக்கிழமை வழக்கு ஓத்திவைக்கப்பட்டது.
இதையெடுத்து, பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, கொரோனா சூழலில் மாணவர்கள் நலன் கருதி சிபிஎஸ்சி தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். மாணவர்களின் உடல் நிலை மற்றும் பாதுகாப்பில் சமரசம் செய்து கொள்ள முடியாது. தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் வாய்ப்பு வழங்கப்படும். மாணவர்களுக்கான மதிப்பெண் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள், பெற்றோரிடம் எழுந்து அச்சத்தை நீக்கவே தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.