சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு! வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வில் மாணவிகள் 2 பேர் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்த தேர்வில், காசியாபாத்தைச் சேர்ந்த ஹன்சிகா சுக்லா என்ற மாணவியும், முசாபர்நகரைச் சேர்ந்த கரிஷ்மா என்ற மாணவியும் 500 க்கு 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். இதனையடுத்து, பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், வெற்றிகரமாக சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து என் இளம் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.