சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வு : தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம்
சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம் பிடித்தனர்.
பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 29 தேதி வரை நடந்த சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் 27 லட்சம் மாணவர்கள் எழுதினார்கள் .தமிழகத்தில் மட்டும் 25000 மாணவர்கள் சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினார்கள்.இந்நிலையில் நேற்று சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது.
அதேபோல் சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 13 மாணவ, மாணவியர்கள் முதலிடம் பிடித்தனர்.சென்னை மாணவர் டி.யாஷாஸ் 498 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்தார்.